Friday, April 08, 2011

என்று அழியும் இந்த ஊழலின் மோகம் !!





தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜெகத்தினை அழித்திடு என்றான்
பாட்டன் எங்கள் பாரதி

தனியொரு மனிதனாய் உண்ணாமல்
ஊழலை அழிக்க இதோ !
தாத்தா நீ ஹசாரே 

எதிரியிடமிருந்து நாட்டை காக்க
அன்றணிந்தாய் இராணுவ உடை
ஊழலிலிருந்து நாட்டை மீட்க
இன்றணிகிறாய் வெள்ளை ஆடை
நல்ல வேளை ! ஆம் ராணுவ உடைகளை
குண்டுகள் எளிதில் துளைக்கின்றனவாம்

ஒரு வங்கியில் கூட உனக்கு கணக்கிலை
ஊழலுக்கு சுவிஸ் வங்கிகளில் இடம் போதவில்லை

விவேகானந்தரால் விழித்தவன் நீ !
உன்னால் உணர்ந்தோம் நாங்கள் !!

உன் பசித்த உடலுக்கு
சட்டத்தால் சாதம் ஊட்டும் வரை
எட்டு திக்கும் குரல் கொடுப்போம்
ஏறுகொண்டு ஊழலை ஒழிப்போம்

1 comment:

Anonymous said...

போதும் என்ற மனமே ! பொன் செய்யும் மனமே ! நமக்கு வரும் போது ................ ஒழியும்