Friday, January 22, 2010

தவற விட்ட பயணச்சீட்டு



பேருந்து பயணத்தில்
வேண்டுமென்றே உரசியவனை
வேகத்தில் முறைத்தும் வைத்தாள்
வேதனையை மறைத்தும் வைத்தாள்

மடித்த புடவை மடிப்பினை
மறைக்குமிடம் அனுப்புமுன்
முதுகினில் முத்தமிட்டே முன்புறம்
உதவும் கையினை நினைத்துவிட்டாள்

தனை அணைக்க தானில்லை
பொங்கியது போதுமென
அடுப்பினில் வெந்த பாலை
அமைதியாய் அனைத்து வைத்தாள்

பெற்றவரின் பெருமையை நினைவிலேற்றி
ஒற்றை கடிதமதை நிராகரித்து
உரிய வரனின்று அமையாமல்
ஊமையாய் அழுது வைத்தாள்

2 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

திருமணமாகாத பெண்ணைப்பற்றியதா கவிதை...!

செல்வேந்திரன் said...

காதலை தவற விட்ட...திருமணமாகாத...பெண்ணின் கதை...