Thursday, October 09, 2008

நிறங்கசியும் இலைகள் !




ஒரு தாய் வயிறானாலும்
வெவ்வேறு நிறத்தில் குழந்தைகளாய்
நிலத்தாய் வளர்க்கும்
மரங்கள் வண்ணக் கலவைகளாய்

எழுவண்ண வானவில்லின் வண்ண
அம்புகளாய் கூர்மரங்கள்
மணிக்கணக்கில் மனங்குளிர
மஞ்சள் வெயில் நிறமரங்கள்

நிறப்போட்டியில் நின்று தோற்று
மரந்தள்ளி மண்வந்த பச்சோந்தி ஒன்று
காய்ந்த இலை மிதித்து
காயந்தனை ஆற்றியது

நிழல்கசியும் மரத்தின் கீழ்
நிலங்கசியும் வேரின் மேல்
நிறங்கசியும் இலைகளைக் கண்டு
நீர்கசிய குளித்தேன் இன்று

நிறம் பேசிய மனிதர்தனை
வெறுத்த மனம்
நிறம் பூசிய மரங்கள் தனை
ரசித்ததின்று ! முழுதாய் மறந்து நின்று !!

6 comments:

Anonymous said...

ஏழு வண்ணம் என்று தானே வரும் selva ??

செல்வேந்திரன் said...

வித்யா,

எழுமையும் ஏமாப் புடைத்து
என்று வள்ளுவர் கையாண்டிருக்கிறார்.. எழு என்பதனை பின்தொடரும் வார்த்தையோடு சேர்த்து பொருள் கொள்ள வேண்டும் :)

Anonymous said...

Thanks Selva for clarification :)

ஹேமா said...

செல்வா,வித்தியாசமான சிந்தனை.

Unknown said...

நன்றி ஹேமா... :)

Venkatramanan said...

செல்வா!
ஒரு வருசம் ஆகியும் வலைபதிய முடியாத அளவுக்கு ரொம்ப பெரியபெரிய ஆணிகளா!
ம்... சீக்கிரம் வலைபதியவும்!

அன்புடன்
மாப்ளே!