Thursday, September 04, 2008

அந்நிய நாட்டில் அகதியா



சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா

உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென

தொலைபேசியில் புலம்புவாய்

தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்

சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே

ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்

நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்

சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே

7 comments:

செங்கதிர் said...

சும்மா ஒன்றும் இல்லை
பூமி சுற்ற காதல் எரிபொருள் இல்லையாம்
கண்டேன் இத்தகவலை
செய்தேன் நம்காதலை.

அருண்மொழிவர்மன் said...

அற்புதமான வரிகள். இதே கருத்தில் அடிக்கடி நான் நண்பர்களிடம் பேசுவதால் நான் தமிழ் பற்றற்றவன் என்று க்ருதப்பட்டதும் உண்டு

செல்வேந்திரன் said...

ஆம் அருள் ...முற்றிலும் உண்மை.... :)
கருதுபவர்கள் கருதட்டும்..என்றாவது ஒரு நாள் அவர்கள் உணர்ந்தால் நன்றுதான்...

Anonymous said...

Nice spoem selva :)
Take care
Convey my rgds to Sanjay too..
---
Hope no need to guess this time
:-)

செல்வேந்திரன் said...

Thanks Vidhya...

Sure...take care.. :)

ஹேமா said...

மனிதாபிமான உணர்வோடு அருமையான கவிதை செல்வா.

செல்வேந்திரன் said...

நன்றி ஹேமா..உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் ஊக்கமளிக்கும்..