Thursday, June 07, 2007

எம்மொழியும் சம்மதம் !



தமிழ்மாதம் தன்னை மறந்துவிட்டு
டிசம்பர் என்ற வார்த்தையினை
திசம்பர் என்று எழுதிவைத்து
தாய்மொழி காத்தோம் ! வாய் முழங்கினார்

படத்தின் பெயருக்கா வரிவிலக்கு
பதிப்பகமொன்றை நிறுவி நடத்து
சிறந்த எழுத்தாளர்களை தத்தெடுத்து
சீரிய தமிழை வீரியமாக்கு

தமிழகத்தில் அயல்மொழியும் கொஞ்சம் பேசு
அயலகத்தில் தமிழைப் பற்றி அதிகம் பேசு
அயலவனும் ஆர்வமாய் கேட்டிடட்டும்
ஆராய்ச்சிக்காய் வேட்டிகட்டி வந்திடட்டும்

எம்மொழியும் சம்மதமெனும் எழதுகோல்
போல் ஆவேனா
வரும்வழியில் வழிகேட்ட அயலவனுக்கு
அவன்மொழியில் வழிதான் சொல்வேனா

பிறமொழி பேசிப் பழகாதவன்
பறவைமொழி எங்ஙனம் கற்றிடுவான்

தாய்மொழியை ஆயுள்வரை வளர்ப்பேனா
பிறமொழியும் முடிந்தவரை கற்பேனா
அடுத்தவீட்டுப் பிள்ளையுடன் விளையாட
அதைக்கண்ட அன்னைத்தமிழும் மகிழ்வாளே

அன்புடன்,
செல்வேந்திரன்

8 comments:

selventhiran said...

தமிழகத்தில் அயல்மொழியும் கொஞ்சம் பேசு
அயலகத்தில் தமிழைப் பற்றி அதிகம் பேசு
அயலவனும் ஆர்வமாய் கேட்டிடட்டும்
ஆராய்ச்சிக்காய் வேட்டிகட்டி வந்திடட்டும்

நன்றாக இருக்கிறது செல்வேந்திரன்

செல்வேந்திரன் said...

உங்கள் பாராட்டுக்க்ளுக்கு மிக்க நன்றி செல்வேந்திரன் !!

சீனு said...

arumai nanba....

Anonymous said...

மிகவும் நன்றாக உள்ளது
வாழ்த்துகள்

navish senthilkumar

செல்வேந்திரன் said...

நன்றி நவிஷ் :)

Anonymous said...

தமிழகத்தில் அயல்மொழியும் கொஞ்சம் பேசு
அயலகத்தில் தமிழைப் பற்றி அதிகம் பேசு



அற்புதம்.வாழ்த்துக்கள்

VP said...

மிகவும் அருமை தோழரே.... உங்களது எண்ணங்கள் விரியட்டும், நல்ல பல கவிதைகள் கிடைக்கட்டும்

- வெங்கட பிரசாத்

செல்வேந்திரன் said...

mikka nanri VP :)