Friday, November 10, 2006

கவிதை எழுத வருவதில்லை !













அண்ணன் மழலையை கொஞ்சும்போது

அன்றைய மழையை கொஞ்சிக்

கவிதை எழுத வருவதில்லை !

உறவுடன் ஒன்றாய் உண்ணும்போது

கொரிக்கும் அணிலின் அழகுகண்டு

கவிதை எழுத வருவதில்லை !

கடுங்குளிரில் முகம்போர்த்தி உறங்காமல்

முகமூட மேகமிலா நிலாக்கண்டு

கவிதை எழுத வருவதில்லை !

ஐந்துநாள் அழுவலக ஐக்கியத்தில்

ஆறாம்நாள் சிந்தித்துச் சிலவரி

கவிதை எழுத வருவதில்லை !

கவிஞனாய் வாழ நினைத்தாலும்

கடமையில் மூழ்கி உழைக்கும்போது

கவிதை எழுத வருவதில்லை !

ஒரு கவிதை எழுத வருவதில்லை !



2 comments:

Anonymous said...

அலுவ‌ல‌க‌த்தில் ஆழ்ந்து விடும் பொது,
ஊண், உறக்க‌ம், உற‌வு ஏதுமில்லை.
உள்ளே உற‌ங்கிக் கொண்டிருக்கும் க‌விஞ‌னுக்கும்
உண‌வில்லை ர‌சிக்க‌.
எப்போதோ பெய்யும் மழை
ம‌ண் வாச‌னையை ம‌ட்டும் கிள‌ப்பி செல்வ‌தில்லை
ம‌ன‌தினில் ம‌ண்டியிருக்கும் ஆசைக‌ளையும்
உள்ளே உற‌ங்கும் க‌விஞ‌னையும்
உலுக்கிவிட்டே செல்கிறது...


க‌விதை sooper...

க‌ண்ண‌தாச‌ன் பாட‌ல்க‌ளை கேட்க்கும் போது, ந‌ம‌க்கும் அந்த‌ வரிகளை நம் வாழ்வினிலே அனுப‌வித்த‌ மாதிரி தோன்றும். இந்த‌ க‌விதையை ப‌டித்த போது, என‌க்கும் அனுப‌வித்த‌ மாதிரி இருந்த‌து....

Kirubakar said...

U r rocking selva.. nice words..