Saturday, July 08, 2006

[காட்சி - அருவி விழும் பாறையில் அழகி அமர்ந்திருக்கிறாள் ]

அழகற்ற அருவி அமர்ந்து அமர்ந்து..
அழகற்று போன என் மேல் அமர்ந்து
அழகாய் ஆக்கிய அழகியே !

சீக்கிரம் எழுந்துவிடு !
பனியாய் நான் உருகுவதற்கு முன் !!

நான் உருகிவிட்டால் அருவிகள்
ஆறாய் ஆகி உன்னை அள்ளிச்
சென்றிடுமோ என்ற அச்சத்தில்
கல்லாய் அமர்ந்திருக்கிறேன் !!

7 comments:

tamil said...

வித்தியாசமான கற்பனை. நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்...

செல்வேந்திரன் said...

வார்த்தைகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி
அவ்வை சண்முகி ;-)
அப்படின்னு சொல்லலாம்ல !

tamil said...

சண்டைக்கு வந்துருவோம்ல :)

இது (அவ்வை)ஷண்முகி... ஷண்முகிதான்.

சீனு said...

sellu...kavithaiyeaa pottutaiyeaa....appadiyeaa anthha photo-vaiyumm pottu irukalam...:(...anyhow.....grt8 poem

செல்வேந்திரன் said...

Seenu,

ennada panarathu ..entha photo va paarthu ezhuthunamo atha publish panna mudiala...Kastapattu ezhuthuna sila paadalgal paduthula varuvathillai ..athu mathirithaanda ;-)

ஓ ! இனிமே (அவ்வை) சண்முகி என்று கூப்பிட மாட்டேன் !!
சண்டைக் கோழி என்று கூப்பிடுவேன் !! சரியா ???

Jazeela said...

அழகி எழுதிருச்சிட்டாங்களா? இல்ல பாவம் அருவி காத்துக்கெடக்கே அதான்கேட்டேன். நல்ல சிந்தனை.

செல்வேந்திரன் said...

அழகி எழுந்துக்க மாட்டாங்க...
இந்த கவிதைக்கு பின்னாடி ஒரு விசயம்..

என் நண்பன் ஒருவன் இந்த கவிதைக்கு மூலகாரணமாய் இருந்த ஒரு பெண்ணின் படத்தை
அனுப்பிருந்தான்...அப்புகைப்படத்தை பார்த்து எழுதியது....ஆனால் இது இன்னும் அந்த பெண்ணுக்கு தெரியாது...அந்த பெண்னை என்க்கும் தெரியாது..;-)