Thursday, April 06, 2006

கருவின் குரல்

பிறந்த பிறகு ஆசையை
துறந்தான் புத்தன்...
பிறக்கும் ஆசையையே துறந்தேனே
புத்தனின் குருவோ ??

நான் உன்னை அம்மா என்றழைக்கத்தான்
உனக்கு விருப்பமில்லை...
உலகம் என்னை அனாதை என்றழைக்கவாவது
விட்டிருக்கலாமே ???

புற உதை புருசனிடம் !
அக உதையாவது மிஞ்சட்டும் என்றா
அழித்துவிட்டாய் ???

பிறவாமலேயே நீச்சலடித்தேன்
உன் நீர்க்குடத்தில் !!
என் பிறப்புக்காக ஏன் எதிர் நீச்சல்
அடிக்கவில்லை ???

நீங்கள் மட்டும் கட்டிலில் ஆடிவிட்டு
என்னை தொட்டிலில் ஆடவிடாமற் செய்ததேன் ???

நீஙகள் செய்த பாவத்தின் சம்பளம்
என் மரணமா ??

பெற்றவர்களின் பாவம் பிள்ளையை போய் சேருமாம்..
அப்படி என்ன பாவம் செய்தீர்கள் ???
பிள்ளையே போய் சேர்ந்துவிட்டதே !!

இறந்தவர்கள் கூட வாழுகிறார்கள் புகைப்படமாய் !!
எனக்கு மட்டும் ஏன் இப்படி ??

தாய்ப்பால் தரத்தான் விருப்பமில்லை உனக்கு...
உன் கையால் கள்ளிப்பால் கொடுக்கும் வரையாவது
உயிர்வாழ விட்டிருக்கலாமே ??

இனியாவது கருக்கலைப்பை தடை செய்யுங்கள் !
கருத்தடையால் தடை செய்யுஙகள் !!

- கலைந்த ஒரு கருவின் கதறல்..

தாய் மொழி இல்லா குழந்தைக்காக
என் தாய்மொழியில் மொழி பெயர்ப்பு - செல்வேந்திரன்

8 comments:

J S Gnanasekar said...

குழந்தையாய் இருந்து கவிதை சொன்னீர்கள் நீங்கள். தாயாய் இருந்து கவிதை சொல்கிறார் எங்கள் கல்வெட்டு. ஒரே விஷயம்தான்; சொல்கிற ஆட்கள்தான் வேறு.

http://premkalvettu.blogspot.com/2005/08/blog-post_11.html

-ஞானசேகர்

செல்வேந்திரன் said...

உங்கள் வார்த்தைகளுக்கு ஓர் வணக்கம் !!

Anonymous said...

அழகான கவிதை !
இதை வாசித்ததும் எனது நண்பன்
ஒருவரின் கவிதை ஞாபகம் வந்தது..!

நீங்களும் பாருங்களேன்
http://nilavunanban.blogspot.com/2006/02/blog-post_23.html
நேசமுடன்..
-நித்தியா

Harish said...

Pinnita maamu

செல்வேந்திரன் said...

Nithya :

Thanks for your words and I will look Rasigav's and give comment to him...Thanks for sharing it to me...

Harish,
thanks machaaan !!

Anonymous said...

super da machi..............

Anonymous said...

Enjoy and felt the lines.

Kirubakar said...

Pinneetinga thalaiva...

"இனியாவது கருக்கலைப்பை தடை செய்யுங்கள் !
கருத்தடையால் தடை செய்யுஙகள் !!"