
பலநாள் பெய்திருந்த பெருமழையில்
சிலதாய் மீந்திருந்த சிறுகிளையில்
அப்பொழுதாய் துளிர்த்திருந்த இலைநடுவில்
எப்பொழுதும் சிரித்திருந்த மலரின்மேல்
சமைந்தவளின் சருமத்தை முகர்ந்தவண்டு
மலரின் தேனமுதை சுவைத்ததின்று
விதவிதமாய் தேன்சுவையை கூட்டில்வைத்து
வரவேற்க வாசலிலே காத்திருந்தும்
கண்ணகியிற்பால் காதலுற்ற கோவ(ல)ண்டின்மீது
கொட்டிவிடும் கோபமுற்ற மாதவித்தேனீ
மதி மயங்கும் மாலையிலே
மழை ரசிக்கும் சோலையிலே
அரங்கேறியது அழகான சிலப்பதிகாரம்
அதைரசித்த புற்களின் ஆரவாரம்
திட்டமிட்டு நாடகம்தான் நடந்திருக்க
கோடாரியுடன் நடந்துவந்தான் கொடுங்கோலரசன்
கதைமுடிந்து கண்ணகிதான் எரிக்குமுன்னே
கயவனவன் எரிப்பதற்காய் வெட்டினானே
எரிந்துபோன மதுரையையே மீட்டிவிட்டோம்
எரியப்போகும் மரத்தினை மீட்கலையே
இரக்கபட்டு கோடாரியை இறக்கப்பா
இல்லையேல் இக்கவின்காட்சிக்கோர் இரங்கற்பா !!
2 comments:
அழகின் சிரிப்பு படித்து எழுதினீரோ? நன்றாக உள்ளது.
அழகின் சிரிப்பு படித்ததில்லை..
பாரதிதாசனுடைய நூல் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்..ஆனால் படித்ததில்லை நண்பரே...
உங்கள் வார்த்தைக்களுக்கு மிக்க மகிழ்ச்சி !!
Post a Comment