
தாய்வந்து தேட சிறுவயதில்
ஆடினாய் நீ கண்ணாமூச்சி
நீவந்து சேர ஏங்கியதால்
என்னுடல் இப்படியாச்சி
உடல்விட்டு உயிர்
போனால் பிணமடா
உனைவிட்டு உண்ணாமல்
அழுகிறேன் தினமடா
சொல்லிவிட்டா பிறந்தோமென
சொல்லாமல் போனாயடா
கொள்ளிவைத்து இறந்தேனென
இல்லாமல் போகுமாடா
நீ பிறந்தபின் கணவனுக்குதான்
கடைசி சாப்பாடு
நீ போனதினால் கணவனால்தான்
வாய்க்கரிசி ஏற்பாடோ
பெண்ணாய் நான் பிறந்ததினால்
இரண்டானது வீடெனக்கு
கண்ணா நீ தொலைந்ததனால்
இருண்டுபோனது வாழ்வெனக்கு
பாலூட்டிய மார்பிரண்டும் துடிக்குதடா
சிரிப்பூட்டிய உன்சிறுமுகமும் தெரியுதடா
தினம்தேடி என்னிதயம் வெடிக்குதடா
எந்நாடியும் துடிக்காமல் அடங்குதடா
உந்தன் 'காணவில்லை' சுவரொட்டியை
எந்தன் 'கண்ணீர் அஞ்சலி' சுவரொட்டி
மூடுமுன்னே ஓடோடி வந்துவிடு
மூடும்கண்களை மெதுவாய் திறந்துவிடு
அன்புடன்,
ந வ செல்வேந்திரன்
5 comments:
ரொம்ப ஆழமான ஒரு போஸ்ட்
மூன்றாவது முறையாக படிக்கும் போது தான்
முழு அர்த்தமும் புரிந்தது
வாசிக்கும் போது ஒரு கோர்வையா ரொம்ப நல்லா இருந்துது!
அதுக்கு மேல எனக்கு சொல்ல தெரியல :)
nalla ezhuthi irukkada sellu...ennamoo pooo vara vara romba periyeaa kavingan ayeteee irukka....un kavithai-yeaa oru tharava padichaa puriyea matenguthu...kellappura poo...vazhthukal nanba
ஆமாம் முகிலன் ,
பேருந்தில் வந்தபோது காணவில்லை சுவரொட்டியை பார்த்தபோதே எழுத வேண்டும் என முடிவெடுத்து எழுதியது...
:)
நன்றி டா சீனு !
ஏதோ ,தோனுவதை எழுதுறேன் டா !
இன்னும் நிறைய செய்யவேண்டும்.:)
எப்படி இருக்க ?
நான் நலம் நண்பரே. இன்னும் கவிதை பிறக்க வில்லையா?
Post a Comment