
அகம் மகிழும் ....
வீட்டில் அடுப்பெரிந்தால் !
வீட்டில் நெருப்பெரிந்தால் ?
வீட்டை விட்டு
வெளியே செல்லவும்,
வீட்டை விட்டு விட்டு
வெளியே செல்லவும் முடியவில்லை !
நானும்,அதுவும் மீண்டும்
சந்திப்போமா என ??
வெடிச்சத்தம் வெறுத்த எங்கள்
உள்ளம் தீபாவளியை
எப்படி தேடும் !!
பாடமென்ன படித்து வந்தாய்
பிள்ளையிடம் வினவிக் கேட்டால்
மறைந்திருந்து சுடுவெதெப்படி,
மாட்டிவிட்டால் சாவதெப்படி ..
…
…
சொல்லி நடந்தான்
துப்பாக்கி மட்டையுடன் !!
கடல் தாயே !
அகதியாய்,அனாதையாய் ஆகவிடாமற்
செய்யவா அன்றே அழைக்க வந்தாய் !
சிலரை அழைத்தும் சென்றாய் !!
நூறடி நிலம் வேண்டாம்
ஆறடி நிலம் போதும்
அதுவும் அவரவர் விரும்பும் போது
அடுத்தவன் விரும்பும் போதல்ல...
போர்கள் நிற்காத பூமியிலே
பூக்களும்தான் பூப்பதில்லை !
பூ பூக்காத பூமியிலே
உயிர் வாழ்ந்தும் பயனுமில்லை !
பயினிலா செயலினை செய்வதற்கு
பாவியவர் தயங்கவில்லை !
தயங்கிவிடும் ஆறறிவே
தடுத்திடுவோம் போர்கள்தன்னை !!
கொள்ளியிடும் ஆசையெல்லாம்
மூட நம்பிக்கை ஆனதடா !
அள்ளியிடும் பிணங்களிலே
அன்னை பிணமும் போகுதுடா !!
மொழி பேசி,இனம் பேசி
அழிந்தவரை போதும்..
நிம்மதியாய் சாப்பிடுவோம்
ஒரு வேளை சாதம் !!
2 comments:
nalla iruku da selllu...gr8
nanri da Seenu !!
Post a Comment